GSTZen உடன் Tally ஒருங்கிணைப்பு

GSTZen-இல் உங்கள் கொள்முதல் பதிவுகளை எப்படி பதிவு செய்யலாம் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. உங்கள் வாங்குதல் பதிவேட்டைப் (Purchase Register) upload செய்த பிறகு, படிவம் GSTR-2A இல் உள்ள உங்கள் விற்பனையாளர்களால் பதிவேற்றிய பொருள்களுக்கு எதிராக உங்கள் புத்தகங்களை reconcile செய்யலாம் Books vs GSTR-2A Reconciliation.

கணினி தேவைகள்

உங்கள் கணினியில் பின்வரும் பொருட்களைச் சரியாக configure செய்யுங்கள்.

1) Tally EPR 9

இந்த கட்டுரையை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால், ஏற்கனவே உங்கள் கணினியில் Tally இருக்கும் என நம்புகிறோம். உங்கள் கணினியின் போர்ட் 9000 இல் Tally Server இயங்குகிறது என்பதை உறுதிப்படுத்தவும். (Tally Main -> Company Info -> Configuration -> Advanced Configuration)

Configuring Tally ERP-9 Server

2) Google Chrome

GSTZen இன் ஒருங்கிணைப்பு Google Chrome உடன் மட்டுமே இயங்குகிறது. சிறந்த அனுபவத்திற்கு, Google Chrome-இன் சமீபத்திய release-ஐ Download செய்து பயன்படுத்தவும்.

3) GSTZen Chrome Extension

Google Chrome App Store இலிருந்து GSTZen Chrome Extension-ஐ நிறுவுக. Install செய்வதற்கு இங்கே கிளிக் செய்க.

Installing GSTZen Google Chrome Extension

Installing GSTZen Google Chrome Extension

Steps to upload your Purchase Register.

உங்கள் கொள்முதல் பதிவுகளை பதிவேற்றுவதற்கான படிகள்.

இங்கே உள்ள Steps-காளை ஒன்றின் பின் ஒன்றாக பின்பற்றவும். உங்கள் கொள்முதல் பதிவுகளை GSTZen இல் எளிதில் பதிவேற்றலாம்.

Open the Purchase Register Importer

கொள்முதல் பதிவு Importer-ஐ திறக்க

GSTZen-இல் உள்ள GSTIN இன் பக்கத்தின் பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் வாங்குதல் பதிவு Importer-ஐத் திறக்கலாம்.

Open GSTZen Tally Connector

STEP 0 - அனைத்து கணினி தேவைகள் நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

உங்களிடம் GSTZen Chrome Extension இல்லை என்றால், உங்கள் திரை பின்வரும் பிழை செய்தியை காண்பிக்கும். இந்தப் பக்கத்தில் காட்டப்பட்டுள்ள பொத்தானைக் கிளிக் செய்து Extension-ஐ நிறுவலாம்.

GSTZen Chrome Extension is not installed

உங்கள் Tally இயங்கவில்லையெனில், பின்வரும் பிழை செய்தியைப் பார்ப்பீர்கள். உங்கள் Tally இயங்குவதை உறுதி செய்து மீண்டும் சரிபார்க்கவும்.

Tally Server is not running

STEP 1 - Tally-இல் நிறுவனத்தை தேர்வு செய்யவும்

Tally-இல், நீங்கள் இறக்குமதி செய்ய விரும்பும் நிறுவனத்தைத் திறக்க வேண்டும்.

Open Company in Tally

GSTZen Tally-உடன் இணைக்கப்பட்டு, செயலில் உள்ள நிறுவனத்தின் பெயரைக் காண்பிக்கும். இந்த நிறுவனத்தின் data-வை நீங்கள் இறக்குமதி செய்ய விரும்பினால், "Use this Company" என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.

Choose Company that is open in Tally

STEP 2 - லெட்ஜர் விவரத்தை Process செய்க

இந்தப் பக்கத்தில், GSTZen Tally-உடன் இணைக்கப்பட்டு, உங்கள் எல்லா லெட்ஜ்களின் விவரங்களையும் பெறும். உங்களிடம் உள்ள date-வின் அடிப்படையில், இந்த operation சில நிமிடங்கள் எடுக்கும். நீங்கள் எந்த நடவடிக்கையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த operation முடிவடையும் வரை பொறுமையாகக் காத்திருங்கள்.

Process Tally Ledger Details

லெட்ஜர்களை இறக்குமதி செய்வது ஒரு முறை செயல்பாடு. இந்த நிறுவனத்திற்கு மீண்டும் data-வை நீங்கள் இறக்குமதி செய்ய விரும்பினால், நீங்கள் இந்த step-ஐத் தவிர்க்கலாம். GSTZen பழைய data-வைக் காண்பிக்கும். அதை நீங்கள் மீண்டும் உபயோகிக்கலாம்.

நீங்கள் தற்போதைய லெட்ஜ்ர் விவரங்களைப் பயன்படுத்த "Use Existing Ledger Details" பொத்தானைக் click செய்யுங்கள். அல்லது புதிதாய் லெட்ஜர் விவரங்களை இறக்குமதி செய்ய, "Process Ledger Details again" பொத்தானை கிளிக் செய்யவும்.

Use details from existing Ledger Master

STEP 3 - தேதி வரம்பைத் தேர்வு செய்யவும்

இந்த படிநிலையில், நீங்கள் GSTZen-இல் பதிவேற்ற விரும்பும் தேதி வரம்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.

Choose date ranges for import

STEP 4 - Tally-யிலிருந்து Vouchers பதிவிறக்கம்

தேதி வரம்பைத் தேர்ந்தெடுத்த பிறகு, GSTZen Tally-உடன் இணைத்து, அந்த தேதி வரம்பில் உள்ள அனைத்து Voucher-கள் மற்றும் Journal உள்ளீடுகளின் விவரங்களையும் பெறும். இந்த செயல் முடிவடையும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். நீங்கள் எந்த நடவடிக்கையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

STEP 5 - Processing Invoices

GSTZen உங்கள் Ledger உள்ளீடுகளை படித்து Purchase Invoice விவரங்கள் --- விற்பனையாளர் GSTIN, விலைப்பட்டியல் தேதி, விலைப்பட்டியல் எண், Taxable Value மற்றும் வரி அளவு போன்ற விவரங்களைக் கட்டமைக்கும். நீங்கள் மதிப்பாய்வு செய்ய Excel File-ல் GSTZen இந்த விவரங்களை வழங்குகிறது.

GSTZen is processing your invoices

நீங்கள் எல்லா விவரங்களையும் சரி பார்த்து, உறுதிப்படுத்தி, GSTZen-இல் பதிவேற்றலாம்.

View summary of Invoices downloaded from Tally

STEP 6 - GSTZen Purchase ரெஜிஸ்டரில் Save செய்யுங்கள்

உறுதிப்படுத்திய பிறகு பதிவேற்றம் வெற்றிகரமாக இருப்பதாக உறுதிப்படுத்தும் செய்தியை நீங்கள் காண்பீர்கள். இப்போது GSTZen இல் பதிவேற்றிய விலைபட்டியலை Purchase ரெஜிஸ்டரில் காணலாம்.

Importing the invoices into GSTZen

Success message when upload is successful

View invoices in GSTZen's Purchase Register